000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பௌத்த முனிவர் |
300 | : | _ _ |a பௌத்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அர்த்தமண்டபத்தின் தென்புற தேவக்கோட்டத்தில் நின்ற நிலையில் உள்ள பெளத்த முனிவர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அர்த்த மண்டப தென்புற சாலைக் கோட்டத்தில் சமபாதத்தில் நேராக நின்ற நிலையில் புத்த முனிவர் ஒருவர் காட்டப்பட்டுள்ளார். கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் தன் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளது போல் இவர் உடல் சற்று பருமனானவராகக் காணப்படுகிறார். வட்ட வடிவ முகத்தை உடையவராய் இருக்கிறார். தலைமுடி சிரஸ்திரகமாய் சுருட்டையாக நீர்க்குமிழ் போல் காணப்படுகிறது. நீள் காதுகளில் அணிகள் ஏதும் காணப்படவில்லை. துணியாலான முப்புரிநூல் உடலின் பின்புறம் சென்று தோள்மாலையாக இடது தோளில் மடிப்புடன் விழுந்துள்ளது. இடது கையை இடது தொடையில் வைத்தவாறு ஊரு முத்திரையாகவும், வலது கையை கடக முத்திரையாகவும் (நண்டு பிடி) வைத்துள்ளார். கணுக்காலுக்கு சற்று மேலே வரை மடிப்புடன் கூடிய நீண்ட கீழாடை அணிந்துள்ளார். இடைக்கட்டு முன்புறம் முடிச்சுடன் தொங்குகிறது. சிவாலயத்தில் பௌத்த தத்துவங்களைக் கூறும் பௌத்த முனிவரின் சிற்பத்தை அமைத்த சோழ அரசனின் சமயப் பொறை போற்றுதற்குரியது. |
653 | : | _ _ |a முனிவர், பௌத்த முனி, பௌத்த முனிவர், பௌத்த துறவி, புத்த முனிவர், புத்த துறவி, புத்த முனி, கும்பகோணம், குடந்தைக் கீழ்க் கோட்டம், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குடந்தைக் கீழ்க்கோட்டம் கோட்டச் சிற்பங்கள் |
752 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.95847464 |
915 | : | _ _ |a 79.37757388 |
995 | : | _ _ |a TVA_SCL_000159 |
barcode | : | TVA_SCL_000159 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |